மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்!

மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்!
Published on

மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவரை பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம், தஞ்சையில் நிகழ்ந்துள்ளது. 

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் மாணவி ஒருவரிடம், கடந்த வாரம் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதைக் கண்டித்த அம்மாணவி கல்லூரியில் உள்ள உள் புகார் குழுவிடம் முறையிட்டார். 

அதை விசாரித்த அக்குழுவினர் குறிப்பிட்ட மாணவன் பாலினச் சீண்டலில் ஈடுபட்டதை உறுதிசெய்தனர். அக்குழுவின் பரிந்துரைப்படி அந்த மாணவரை இடைநீக்கம் செய்துள்ளனர். 

ஆனால் அந்த நடவடிக்கை போதாது; அவனைக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துணைமருத்துவம் படிக்கும் மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தகவல் அறிந்துவந்த கல்லூரி முதல்வரும் கண்காணிப்பாளரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

logo
Andhimazhai
www.andhimazhai.com