சித்தா, ஆயுர்வேத, ஓமியோ கடைசிக் கட்டக் கலந்தாய்வு!

சித்தா, ஆயுர்வேத, ஓமியோ கடைசிக் கட்டக் கலந்தாய்வு!
Published on: 

நடப்புக் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட இறுதி காலியிடங்களுக்கான கலந்தாய்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை ஆயுஷ் (BAMS / BSMS / BUMS / BHMS) மருத்துவப் பட்டப்படிப்புகளில், அரசு ஒதுக்கீடு / அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் மூன்று சுற்று இணையவழிக் கலந்தாய்வுகள் மற்றும் முதற்கட்ட இறுதி இடங்களுக்களுக்கான கலந்தாய்வு நிறைவடைந்த பின்னரும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சேர்க்கைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) வரவேற்கப்படுகின்றன.

Ø  பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான உரிய தகவல் தொகுப்பேட்டினை ”www.tnayushselection.org”  என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Ø  இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Ø  தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை மருத்துவம்) (NEET-UG) - 2026–இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்   மட்டுமே பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.  

Ø  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

Ø  இரண்டாம்கட்ட இறுதி காலியிடங்களுக்கான சுற்றின் காலியிட விவரங்கள் தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnayushselection.org-ல் பதிவேற்றம் செய்யப்படும்.

Ø  விண்ணப்பிக்கும்முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.

Ø  விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

Ø  விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் / அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Ø  படிப்புப் பிரிவு : பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ்

Ø  படிப்பிற்கான காலம் : 5 1/2 ஆண்டுகள்

Ø  படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி) & தகுதியான NEET-UG (2026) மதிப்பெண்கள்

Ø  இணையவழி விண்ணப்பக் கட்டணம்:

அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்)

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்)

OC, BC, BCM, MBC / DNC பிரிவினர்

SC, SCA & ST

பிரிவினர்

ரூ.500/-

விலக்கு அளிக்கப்பட்டது

ரூ.1000/-

ரூ.1000/-

அறிவிக்கை நாள்

21.11.2026

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்

22.11.2026 முதல்

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்

23.11.2026  மாலை 5.00 மணி வரை

Ø  கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

இத்தகவலை இந்திய மருத்துவம் - ஓமியோபதித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.