மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 69.90 முதல் 69.95 என்ற அளவிலேயே இருக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரம் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அளித்துள்ள விளக்கம்:
வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, நள்ளிரவு 12 மணிக்குத்தான் முழுமையான விவரங்கள் கிடைக்கப் பெறும் என்று தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட வாக்கு சதவீதம் 69.46 ஆக உள்ளது.
இப்போது வாக்குச் சாவடிவாரியாக விவரங்களைப் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இது விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். இறுதி வாக்குப் பதிவு சதவீதம் 69.90 முதல் 69.95 என்ற அளவிலேயே இருக்கும் என கணிக்கிறோம். பெரிய அளவுக்கு வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை” என்றார்.