சென்னை தீ விபத்தில் 100 வாகனங்கள் சேதம்!

சென்னையில் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனங்கள் சேதம்
சென்னையில் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனங்கள் சேதம்
Published on: 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்திற்குப் பரவியது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின. சென்னை மாநகராட்சி இடத்துக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி வாகனங்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் நாசமாகின.

இத்தீவிபத்தால், வானம் எட்டும் அளவிற்கு புகைமூட்டம் ஏற்பட்டது. அப்பகுதியில் கரும்புகை பரவியதால் வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர்.

தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com