ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து... முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம்?

ஜிஎஸ்டி ஆணையரகம்
ஜிஎஸ்டி ஆணையரகம்
Published on

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 6 வண்டிகளில் வந்து தீயணைப்புப் படையினர், சுமார் 2.30 மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து காரணமாக ஜன்னல் வழியாக கரும்புகைகள் வெளியேறின. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள கேண்டீனில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில், தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமார் 2.30 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் இருந்த தளவாடப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் எரிந்து சேதம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com