தீபாவளி
தீபாவளி

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

தீபாவளி அன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்த ஆண்டும் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி, பசுமைப் பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com