முதல் உள்நாட்டுத் தயாரிப்புப் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி!

கோழிகளுக்கு இடையே பரவும் பறவைக் காய்ச்சலை தடுக்க புதிய தடுப்பூசி
கோழிகளுக்கு இடையே பரவும் பறவைக் காய்ச்சலை தடுக்க புதிய தடுப்பூசி
Published on: 

கோழிகளுக்கு இடையே பரவும் பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்காக நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போபாலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்தப் புதிய தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இயங்கும் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்தத் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். அவர்களை கவுரப்படுத்தும் வகையிலேயே போபாலில் இந்தத் தடுப்பூசியின் அறிமுக விழா நடைபெறுவதாக மத்திய வேளாண் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அண்மைக் காலமாக கோழிகளுக்கு இடையே அதிக அளவில் பரவும் பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான ஹெச்5 என்1 வைரஸின் குறிப்பிட்ட வகைகளுக்கு எதிராகச் செயல்படும் வகையில், இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறு, குறு கோழிப் பண்ணையாளர்கள் எளிதில் வாங்கிப் பயன்படுத்தும் வகையில், ரூ.1 முதல் ரூ.2 வரையிலான மிகவும் மலிவான விலையில் இந்தத் தடுப்பூசி விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தத் தடுப்பூசியின் முக்கிய நோக்கம் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் மொத்தமாக அழிபடுவதையும், பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பெரும் பொருளாதார இழப்புகளையும் தடுக்க வேண்டும் என்பதுதான் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram