ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!
தலைமை செயலகம்

ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 3 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி,

1. வணிக வரித்துறை முதன்மை செயலாளராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா மாற்றப்பட்டு புதிய செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

4. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. டிட்கோ எனும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சந்தீஷ் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com