நூல் கொள்முதல் ஊழல் : ஐந்து நூலக அதிகாரிகள் இடைநீக்கம்!

நூலக ஊழல்
நூலக ஊழல்
Published on: 

அரசு நூலகங்களுக்குப் புத்தகங்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, ஐந்து மூத்த நூலக அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுநூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு, 5 மூத்த அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள்:

1) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொறுப்பு தலைமை நூலகர், தகவல் அலுவலர் - காமாட்சி.

2) மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பொறுப்பு தலைமை நூலகர், தகவல் அலுவலர் - தினேஷ்குமார்.

3) கோவை பெரியார் நூலகத்தின் பொறுப்பு அலுவலர் - சந்தானகிருஷ்ணன்.

4) சென்னை நூற்றாண்டு நூலகத்தின் நூலகர், தகவல் அலுவலர் - சந்தான கார்த்திகேயன்.

5) பொது நூலக இயக்குநரகத்தின் தலைமை கணக்கு அலுவலர் - ஜே. ஜூலியட்

மேலும், பொது நுாலகத்துறை இயக்குநராக இருந்த ஜெயந்தி நீக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநுால் - கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஷஜீவனா, பொது நுாலகத் துறைக்கு இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram