தமிழகத்தில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க பிரத்யேக வாட்சாப் எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
லஞ்சம் கேட்பவர்கள் குறித்த ஆதாரங்களை இந்த வாட்சாப் எண்ணிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசுத் துறை இணையதளங்கள், பொது இடங்களில் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள், லஞ்சம் குறித்து புகார் அளிக்க வேண்டிய வாட்சாப் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை தமிழ், ஆங்கிலத்தில் தெளிவாகத் தெரியும்படி எழுதி வைக்கவேண்டும்.
லஞ்சம் குறித்து புகார் அளிக்க கொடுக்கப்பட்டுள்ள வசதிகள்:
வாட்சாப் எண்: 94981 80936
தொலைபேசி எண்கள்: 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142
மின்னஞ்சல் முகவரி: dvac@nic.in
நேரடி அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
இயக்குநர்,
லஞ்ச ஒழிப்பு - கண்காணிப்புத் துறை இயக்ககம்,
எண். 293, எம்.கே.என் சாலை,
ஆலந்தூர்,
சென்னை - 600016.