அன்பில் மகேஸ் வழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சரண்!

முத்துக்குமார் சரணடைந்தார்
முத்துக்குமார் சரணடைந்தார்
Published on: 

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

அரசு அனுமதி வாங்கித் தருவதாக தனியார் பள்ளிகளிடமிருந்து ரூ.400 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துக்குமார், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை, காவல் துறை கைதுசெய்து, புழல் சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் தொடர்புடைய தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் ஜாமினில் வெளியில் உள்ளார்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், இவரின் முன்ஜாமின் மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருந்த முத்துக்குமார், இன்று காலை சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு சரணடைந்தார்.

இவர் தி.மு.க. ஆட்சியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com