ராஜேஷ் தாஸ்
ராஜேஷ் தாஸ்

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் அதிரடி கைது!

பிரிந்துவாழும் மனைவியிடம் தகராறு செய்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கேளம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குள், தையூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எரிசக்தித் துறைச் செயலருமான பீலா வீடு உள்ளது. இவரின் கணவர் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ்தாஸ் கடந்த ஆட்சியில் சக பெண் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்தார். அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பீலா கணவரைப் பிரிந்தார். அவர் சட்டரீதியாக விவாகரத்து பெறவும் முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், தனியாக வசித்துவரும் பீலாவின் வீட்டிற்கு ராஜேஷ் தாஸ், பத்து நபர்களுடன் சென்று, அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார். பீலாவின் வீட்டுக் காவலாளியையும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து, பீலா அளித்த புகாரில், கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதையடுத்து இன்று ராஜேஷ்தாஸ் கைது செய்யப்பட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com