மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கதிரவன் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் போன்றவற்றில் மும்முரம் காட்டி வருகின்றன.
அந்தவகையில், அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. உட்பட்ட முன்னணிக் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
நேற்று, புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணியை உறுதி செய்தது.
அதைத் தொடர்ந்து, பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கதிரவன் சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன், தேனி அல்லது தென் மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதி வழங்க தாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.