'வெற்றிப் பயணம்' திட்டத்தைத் தொடங்கிவைத்த விஜய்!

CM Vijay inaugurated free bus for women
'வெற்றி பயணம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
Published on: 

'வெற்றிப் பயணம்' என்ற மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை, முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதுவரை சாதாரண பேருந்து, 40 கி.மீ. வரையிலான மலைப் பகுதியில் உள்ள சாதாரண பேருந்துகளில் மட்டும் இலவசமாக மகளிர் பயணம் செய்துவந்தனர். இந்த வெற்றிப் பயணம் திட்டத்தின் மூலமாக மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ், அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதியில் உள்ள சாதாரணப் பேருந்துகள் ஆகியவற்றுக்கு விரிவுபடுத்தப்பட்டு மொத்தம் 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலமாக நாளொன்றுக்கு 84.32 மகளிர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தேர்தல் காரணமாக செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்தத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com