மகளிர் இலவசப் பயணம்
மகளிர் இலவசப் பயணம்

மலைப் பகுதிகளிலும் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம்!

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கும் திட்டம், இதுவரை மலைப்பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மலைப் பகுதிகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை அறிவிப்பு விவரம்:

“மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் விடியல் பயணம்" என்ற மகத்தான திட்டம் தற்போது மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த ஆண்டில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தோழி' விடுதிகள் கட்டப்படும்.

உயர்கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்.”

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com