“கொங்கு மண்டலம் இனி யாருடைய கோட்டை...?”

செங்கோட்டையன்
செங்கோட்டையன்
Published on

கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என தவெகவின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: “டிச.16ல் விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஈரோட்டில் வாரி மஹால் அருகே தவெக தலைவர் பரப்புரைக்காக அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி மறுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் வருகின்றன. ஆனால் கால்துறையிடம், நாங்கள் கேட்டபோது அனுமதி மறுத்துள்ளதாக இதுவரை கடிதங்கள் எழுதவில்லை என தெரிவித்துள்ளார்கள். இருந்தாலும் எச்சரிக்கையாக, டோல் கேட் அருகே மாற்று இடத்திற்கும் அனுமதி கேட்டு கடிதம் வழங்க இருக்கிறோம். விஜய்யின் வருகை ஈரோட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com