கமல்ஹாசன்
கமல்ஹாசன்

காந்தியின் சொற்கள் நம்மை வழிநடத்தும்! – கமல்ஹாசன்

“காந்தியின் சொற்கள் நம்மை வழிநடத்தும்” என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 76ஆவது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், “தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக.” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com