கடலூர் மாவட்டத்தில் இரயில் பாதை கடவையில் கேட்டை மூடாமல் விட்டதுதான் பள்ளி வேன் மீது மோதி விபத்து ஏற்படக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று சென்றபோது, இரயில்வே கடவை மூடாமல் இருந்ததால் வேன் ஓட்டுநர் இரயில்பாதையைக் கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையை நோக்கிச் சென்ற இரயில்வண்டி மோதியதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர்.
இரயில் கடவைக் காப்பாளர் தூங்கியதுதான் காரணம் என அந்தப் பகுதியில் உள்ளவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் அதை இரயில்வே நிருவாகம் உடனே ஒப்புக்கொள்ளவில்லை.
துறை விசாரணை முடிவடையவுள்ள நிலையில், அந்த இரயில்வே கடவையின் காப்பாளர்தான் இரயில் வருவதை அறிந்தும் கேட்டை மூடாமல் இருந்துள்ளார்; ஆனால் மூடிவிட்டதாக இரயில்நிலைய அதிகாரிக்கு இரகசியத் தகவல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்; அதை நம்பி அவரும் இரயில் செல்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.