ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு... பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க பிரத்யேக எண்!

Gem granite Veeramani
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி
Published on: 

ஜெம் கிரானைட் வீரமணியால் சீரழிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கொடுக்கப்பட்ட புகாரையடுத்து, அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரித்து வருகிறது.

இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், தொழிலதிபர் ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்ட ஒரு 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக, அவருடைய தாயார் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, வீரமணியின் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொழிலதிபர் வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக 9345319676 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணிற்கு அழைத்தோ அல்லது வாட்ஸாப் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com