தமிழ் நாடு
சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மாதங்களுக்கு முன்னர் இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது என்றும் ஆனால் போலீஸ் அதிகாரிகள் சிலர் விவகாரம் பெரிதாகாதபடி வழக்கை அமுக்கிவிட்டனர் என்றும் இப்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அந்த அதிகாரிகள் யார் யார் என்றும் விசாரிக்கப்படுகிறது; அதன்படி, அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீரமணிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகப் பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.