பெண் குழந்தைகள் தற்காப்பு கலை பயில வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

அன்புமணி
அன்புமணி
Published on

பெண் குழந்தைகள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை பயில வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற தனியார் தற்காப்பு கலை நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில், தற்காப்பு கலையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அன்புமணி ராமதாஸ் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு ‘கவுரவ பிளாக் பெல்ட்’ மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“குழந்தைகள் அனைவரும், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாட்டில் நிலவும் சூழலை நீங்கள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். பெண் குழந்தைகளை படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பும் பெற்றோர் எல்லாம் பயத்திலேயே இருக்கிறார்கள். எனவே பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை பயில வேண்டியது அவசியம்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com