தமிழ் நாடு
இன்று வெளியிடப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் பள்ளிகள் வகைரீதியான தேர்ச்சி விவரம் கிடைத்துள்ளது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி 92.16%.
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்- 96.14%
தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள்- 98.72%.
இருபாலர் பள்ளி மாணவர்கள்- 95.3%.
பெண்கள் பள்ளி மாணவர்கள்- 97.08%.
ஆண்கள் பள்ளி மாணவர்கள்- 90.49%.
ஆண்கள் பள்ளிகளைவிட பெண்கள் பள்ளி மாணவர்கள் 6.59 சதவீதம் கூடுதலாகவும் இருபாலர் பள்ளி மாணவர்கள் ஆண்கள் பள்ளி மாணவர்களைவிட 4.81 சதவீதம் கூடுதலாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.