சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

தெலுங்கானா – புதுவை ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

தெலுங்கானா - புதுவை மாநில ஆளுநர் பொறுப்புகளை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா - புதுவை மாநில ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தராரஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழிசை ராஜினாமா செய்ததை அடுத்து தெலுங்கானா - புதுவை மாநில ஆளுநர் பதவிகள் காலியானது. இந்நிலையில் தமிழிசையின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தெலுங்கானா - புதுவை மாநில ஆளுநர் பொறுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் கவனிப்பார் எனவும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக தெலுங்கானா - புதுவை மாநில ஆளுநர் பொறுப்புகளைக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com