சர்ச்சை ஆன ஆளுநர் ரவியின் திருவள்ளுவர் நாள் வாழ்த்து!

சர்ச்சை ஆன ஆளுநர் ரவியின் திருவள்ளுவர் நாள் வாழ்த்து!

ஆளுநர் ஆர்.என்.இரவி இன்று இராமநாதபுரம் மாவட்டத்துக்கு சுற்றுலா சென்று, ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை, தர்பசயனத்தில் ராமர் இருக்கும் ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் வழிபட்டார். தை இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு அரசால் திருவள்ளுவர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, அவர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்துக்கு மலர் வணக்கம் செய்தார்.

இதனிடையே ஆளுநர் ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் நாள் வாழ்த்துச் செய்தியையும் வெளியிட்டுள்ளார். அதில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தையும் திருவள்ளுவரை பாரதிய சனாதன மரபின் புனித துறவி என்று குறிப்பிட்டும் அவர் பதிவிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான திருவள்ளுவர் படம் ஒன்றே அரசு தரப்பில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆளுநராக இருப்பவரே இப்படி அதிகாரபூர்வமற்ற படத்தை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிடலாமா என்று பலரும் கேட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com