ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட 9 காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்ட 9 காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

பெட்ரோல் குண்டு: தடுத்த காவலர்களை வரவழைத்து ஆணையர் பாராட்டு!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 9 காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், சிறப்பாகச் செயல்பட்ட 9 காவலர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்த சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்து, சிறப்பாக செயல்பட்ட 9 காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com