நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவி நீக்கம்… சபாநாயகரிடம் மனு!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
Published on

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்ககோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனுவை திமுக கூட்டணி எம்பிக்கள் சபா நாயகர் ஓம் பிர்லாவிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.

சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றாக இணைந்து நீதிபதி ஜிஆர் சாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவில் 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எத்தனை எம்பிக்களின் ஆதரவு தேவை

ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால், மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் ஆதரவு தேவை. அல்லது மாநிலங்களவையில் 50 எம்பிக்கள் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். இப்படி ஆதரவு கிடைத்தாலும், நீதிபதியை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிட முடியாது. பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரத்தான் இந்த ஆதரவு அவசியம். தீர்மானம் கொண்டு வந்த பிறகு, மூன்று பேர் கொண்ட குழு அதை விசாரிக்கும். விசாரணை முடிந்ததும் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். இறுதியாக அவர்தான் பதவி நீக்கம் செய்வார். இப்படித்தான் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com