3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  அரை நாள் விடுமுறை!
Published on

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com