மோசடிப் பதிப்பாளர் மீது வழக்கு- நீதிமன்றம் ஆணை

Madras high court madurai bench
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
Published on: 

அகல் விளக்கு பதிப்பாளர் மீது வழக்கு பதிந்து முதல் தகவல் அறிக்கையை நாளை தாக்கல்செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

நெல்லையைச் சேர்ந்த இராமசுப்பு என்பவர் தொடுத்த வழக்கில் மதுரைக் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பொது நூலகங்களுக்கு புத்தகங்களைக் கொள்முதல் செய்தோர் பட்டியலைத் தாக்கல்செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

இதில், அரசாங்கத்தை தாங்கள் குறைசொல்லவில்லை என்றும் முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியும் அதிகாரிகளே இதில் பொறுப்புடையவர்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.