ஓ.பன்னீர் அ.தி.மு.க. கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தடை!

ஓ.பன்னீர் அ.தி.மு.க. கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தடை!

அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தலைமைப்பதவியை உரிமைகோருவது தொடர்பாக பிரச்னை நீடித்துவருகிறது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் பன்னீர் தரப்புக்கு எதிராக பழனிசாமி தரப்பு வழக்கு தொடுத்திருந்தது. அதில் இன்று நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமி தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர், பன்னீர் தரப்பினரின் உரிமைகோரலால் மக்களிடையே யார் அ.தி.மு.க. என குழப்பம் ஏற்படுவதாகவும் கட்சியின் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

பன்னீர் தரப்பில் பதிலளித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தங்களின் மேல்முறையீட்டு வழக்கு வரிசையில் எண்ணிடப்பட்டு உள்ளதாகவும் எனவே தங்களுக்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.  

ஆனால் மூன்றாவது முறை இந்த வழக்கின் விசாரணை நடக்கும்நிலையில், பன்னீர் தரப்பு பதில் அளிக்க மிகவும் தாமதம் செய்வதாகவும் கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்த தடைவிதிக்கவும் பழனிசாமி தரப்பு வாதிட்டது. 

நீதிபதி சதீஷ்குமார் அதை ஏற்றுக்கொண்டு, பன்னீர் தரப்பு கட்சியின் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com