தமிழ் நாடு

நீட் மறுதேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் மருத்துவத் துறைச் செயலாளர் தரேஸ் அகமது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்:
”2026-27 கல்வியாண்டின் நீட்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.” என்று தாரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.