நடிகர் விஜய்
நடிகர் விஜய்

“வாழ்த்து கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” - நடிகர் விஜய்

தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கினார். நெருங்கி வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்தார். பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, "தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். அன்புடன், விஜய்" இவ்வாறு தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com