கோடை வெயில்
கோடை வெயில்

அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மே 2ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட்ட 17 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் போலவே மேலும் சில மாநிலங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com