அக்வான் புயல் - நவம்பர் 18,19ஆம் தேதிகளில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

Heavy rain alert
கனமழை எச்சரிக்கை
Published on: 

வங்கக்கடலில் உருவாகவுள்ள அக்வான் புயல் எதிரொலியாக சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளதாவது:

"இன்றும், நாளையும் வடகடலோர தமிழக மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதைதொடர்ந்து, வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று அக்வான் புயலாக மாறவுள்ளது. இதனால், வரும் நவம்பர் 18,19ஆம் தேதிகளில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும்." என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram