சென்னை மெரினாவில் கனமழை!

சென்னை மெரினாவில் கனமழை!

சென்னை மெரினா பகுதியில் டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்ட குறிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது விசாகப்பட்டினத்திற்குக் கிழக்கே சுமார் 410 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.” என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் படி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறையில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த மாதம்1ஆம் தேதி முதல் இன்றுவரை அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 702.5 .மீ. மழை பெய்துள்ளது. குறைந்த அளவாக திருப்பத்தூரில் 94.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com