தமிழ் நாடு
புதுச்சேரியிலிருந்து 4.5 லிட்டர் மதுவைக் கொண்டுவர அனுமதி உண்டு என அண்மையில் ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
அதையடுத்து, இதில் தமிழக அரசு விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவை மட்டுமே ஒருவர் அதிபட்சமாக 4.5 லிட்டர் அளவுக்கு வைத்துக்கொள்ள முடியும் என இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, புதுச்சேரியிலிருந்து 4.5 லிட்டர் மதுவைக் கொண்டுவந்தால் அதில் தவறில்லை என வாதிடப்பட்டது. அதை ஒப்புக்கொள்ளப்பட்டது.