அ.தி.மு.க. மாநாட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

அ.தி.மு.க. மாநாட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்; விமான நிலையம் அருகில் உள்ள இடத்தில் நடக்கவுள்ள மாநாட்டின்போது வாண வேடிக்கைகள் வெடிப்பார்கள் என்றும் தரையிறங்கும் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் விமானப் பாதுகாப்புப் படையினரிடம் அனுமதி கிடைக்கவில்லை என்றும் சிவகங்கை மாவட்டம் சேதுராமலிங்கம் என்பவர் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுந்தர், பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதிமுக தரப்பு வழக்கறிஞர் வெடி வெடிக்காதபடி பார்த்துக்கொள்வதாக உறுதிமொழி அளித்தார்.

கடைசி நேரத்தில் வழக்கைத் தாக்கல் செய்திருப்பதால் தடை விதிக்க முடியுமா எனக் கேட்டு, நீதிபதிகள் அம்மனுவை த் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம் அதிமுக மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கப்படுமோ என்ற அக்கட்சித் தொண்டர்களின் பதைபதைப்பு முடிவுக்கு வந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com