இந்தியில் ஊர்ப் பெயர்கள் - 2 பொறியாளர்கள் இடைநீக்கம்

இந்தியில் ஊர்ப் பெயர்கள் - 2 பொறியாளர்கள் இடைநீக்கம்
Published on: 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன் கூடுதலாக இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன என அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க, பா.ம.க. முதலிய பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநில அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  

”தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை  உதவிக் கோட்டப் பொறியாளர்  மற்றும் உதவிப் பொறியாளர்  ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச்  செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com