கமலாலயம்
கமலாலயம்

பா.ஜ.க.வில் தொகுதிப் பேச்சுக்கு குழு அமைப்பு!

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக பா.ஜ.க.வில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அனுமதியுடன் கட்சிகளுடன் ஆலோசிக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மோகன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எச் .ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com