கூடுதல் செலவுகளை சமாளித்தது எப்படி? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

தமிழக மக்களுக்கு ஜனவரி மாதம் பொங்கல் பரிசு, பிப்ரவரி மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை என கூடுதல் செலவுகளை சமாளித்தது எப்படி? என்பது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

தமிழக பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவிருப்பதால், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

அண்மையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது போன்ற கூடுதல் செலவினங்கள் தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

இது குறித்து பட்ஜெட்டில் பேசிய தங்கம் தென்னரசு, குடும்பத்துக்கு ரூ.3000 வீதம் பொங்கல் பரிசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவியாக 5,000 ரூபாயை பிப்ரவரி மாதத்தில் வழங்கியது என ஒட்டுமொத்தமாக தமிழக அரசு 10,849 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளது.

இவ்வாறான கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளபோதும், வளர்ச்சி சாராத செலவினங்களில் ஏற்படக்கூடிய சேமிப்பின் காரணமாக, ஒட்டுமொத்த செலவினங்களின் உயர்வு 5,713 கோடி ரூபாயாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,93.272 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 3.79 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும் என்று அறிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com