விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசைஞானி இளையராஜாவை அர்த்த மண்டபத்தில் அனுமதிக்கவில்லை என சர்ச்சை எழுந்தது.
பல தரப்பினரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் கோயில் நிருவாகத்துக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்துசமயத் துறையின் சார்பில் ம்துரை மண்டல இணை ஆணையர் விளக்கம் வெளியிட்டுள்ளார்.
அதில், “ ஆண்டாள் கோயில் மரபுப்படி அர்த்த மண்டபத்துக்குள் அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள்வரை நுழையலாம்; வேறு யாருக்கும் அனுமதி இல்லை. சின்ன இராமானுஜ ஜீயருடன் சென்ற இளையராஜா அர்த்த மண்டபத்துக்குள் நுழைய முயன்றபோது, அவரிடம் அதன் படிக்கு முன்பாகவே நின்று வழிபடுமாறு ஜீயரும் மணியமும் கூறினார்கள். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். அவர் வெளியிலும் ஜீயர் உள்ளேயும் இருந்து தரிசனம் செய்தனர்.” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.