“எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் பாடும் வானம்பாடி நான்…!”

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
Published on

கடைசி காலம் வரை எம்ஜிஆர், ஜெயலலிதா புகழப் பாடும் வானம் பாடியாகவே இருப்பேன் என கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையனைத் தொடர்ந்து தானும் தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நீண்ட காலம் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

செங்கோட்டையனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுகவில் இணையப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் அளித்த பதில்,”எனக்கு சிரிப்புதான் வருகிறது. அண்ணன் செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க.

என்னைப் பொறுத்தவரை ஒரே கட்சிதான். நேற்று, இன்று, நாளை. என்னுடைய இறுதிகாலம் வரை, செத்தால் கூட அதிமுக கொடியுடன் தான் போவேன். யார் வீட்டு முன்னாலும் காத்திருக்க மாட்டேன்.

புலிக்கு வாலாக இருக்கலாம், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. அதிமுக என்ற புலிக்கு வாலாக இருப்பதை பெருமையாக கருதுகிறேன். சபாநாயகன், மீன்வளத்துறை அமைச்சர் என 15க்கும் மேற்பட்ட துறைகளிலும் கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். இந்த பெருமைகளோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் பாடும் வானம்பாடியாக இருப்பேனே தவிர, யார் வீட்டு கதவையும் தட்டமாட்டேன்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com