ஸ்டாலின் தோல்விக்கு அமைச்சர் சேகர்பாபுதான் காரணம்- தி.மு.க. எம்.எல்.ஏ. பகிரங்கக் குற்றச்சாட்டு

ஸ்டாலின் தோல்விக்கு அமைச்சர் சேகர்பாபுதான் காரணம்- தி.மு.க. எம்.எல்.ஏ. பகிரங்கக் குற்றச்சாட்டு
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு அமைச்சர் சேகர்பாபுதான் காரணம் என்று சென்னை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கூறியுள்ளார். 

இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் இடுகை:

”எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.

அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்! குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!

தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத் தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.

தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு?” என்று பரந்தாமன் கேட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com