போட்டியிட விருப்ப மனு அளிக்க மாட்டேன் – ஜி.கே. மணி

ஜி.கே. மணி
ஜி.கே. மணி
Published on

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க மாட்டேன் என பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று (ஜனவரி 9) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதாக முடிவு செய்யவில்லை. மருத்துவர் ராமதாஸின் முடிவுதான் கட்சியில் இருப்பவர்களின் முடிவு. அவர் சொல்வதை கேட்டுத்தான் நாங்கள் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம்.

நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விருப்ப மனு கொடுக்கப் போவதில்லை. 46 வருடங்களாக அவருடன் இருக்கிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் என் முடிவு” என்றார்.

மேலும், “அன்புமணி வந்து ராமதாஸை சந்தித்துப் பேசியிருந்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைந்திருப்போம். ‘ஐயா, உங்கள் தலைமையில் கூட்டணி பேசலாம்’ என்று சொல்லியிருந்தால் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். தமிழகத்தில் கடந்த காலத்தில் இருந்ததைவிட பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் அதிக வலிமை பெற்றிருக்கும். ஆனால் அவர் தனியாகச் சென்று கூட்டணி பேசிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com