‘அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன்’ – தவெக தலைவர் விஜய்

TVK Leader Vijay
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டு மன வேதனை அடைந்ததாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது?. நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே.

அதற்காகவே இந்த கடிதம், எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடம் நான் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும் , அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம், அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com