உள்துறைச் செயலாளர் மணிவாசன் அதிரடி மாற்றம்!

Tamilnadu government secretariat
தலைமைச்செயலகம்
Published on: 

தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மணிவாசன் நில நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

அவருக்குப் பதிலாக தமிழ்நாடு சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக், உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

நிதித்துறை செலவினங்கள் பிரிவுச் செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மின் உற்பத்திக் கழக தலைவராகவும் இவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும் செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னைக் குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். 

தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com