பல்கலைக்கழக மானியக் குழுவால் வரும் டிசம்பரில் நடத்தப்பெறவுள்ள தேசியத் தகுதி தேர்வுக்கான (NET) நேரடி பயிற்சி வகுப்புகளை சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தவுள்ளது.
நாளை அக்.3ஆம் தேதி முதல் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.
இரண்டாம் தாளுக்கான பயிற்சி வகுப்பு (தமிழ் முதன்மைப் பாடம்) வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முற்பகல் 10 – 1 மணி வரையிலும்,
முதல் தாளுக்கான பயிற்சி வகுப்பு (General Papar on Teaching and Research Aptitude) வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 10-1 மணிவரையும் நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்புகளுக்கு கட்டணம் இல்லை.
இதில் கலந்துகொள்ள விரும்பும் பிற கல்லூரி /பல்கலைக்கழக மாணவர்கள் தொலைபேசி : 22542992, கைப்பேசி : 90808 65906 அல்லது மின்னஞ்சல்: iitstaramani@gmail.com வழியாகப் பதிவு செய்து வகுப்பில் கலந்துகொள்ளலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.