35 நாள்களில் சுத்தமான சிம்பொனி: அசத்தல் இளையராஜா சொன்னது என்ன?

இளையராஜா
இளையராஜா
Published on

என்னை வாழ்த்திக்கொண்டிருந்த நேரத்தில் சுத்தமான சிம்பொனியை எழுதிவிட்டேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு இசை ரசிகர்களுக்கு வியப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாகக் கூறியிருந்த அவர், மாலை 6.13 மணியளவில் தன் ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைக் காணொலியாக வெளியிட்டுள்ளார்.

அதில், “ என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் பல வீடியோக்கள் வந்துகொண்டிருப்பதாக வேண்டியவர்கள் வந்து சொல்வார்கள். இதையெல்லாம் நான் கவனிக்கிறதில்லை. ஏன்னா, மத்தவங்கள கவனிக்கிறது என் வேலை இல்ல. என்னோட வேலைய கவனிக்கிறதுதான் என் வேலை. நான் என் வழியில ரொம்ப சுத்தமா போய்கிட்டிருக்கேன். நீங்க வாழ்த்திக்கொண்டிருக்கிற நேரத்தில ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதிமுடித்துவிட்டேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ திரைப்படப் பாடல்கள், இடையில் சில இடங்களுக்கும் விழாக்களுக்கும் தலையைக் காட்டிவிட்டு, ஒரு சிம்பொனியை 35 நாள்களில் முழுவதுமாக நான்கு கட்டங்கள் மூவ்மெண்ட்ஸ்) உள்ள- சிம்பொனின்னா என்னவோ அதை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோசமான செய்தியைச் சொல்லிக்கொள்கிறேன். திரைப்பட இசை வேற, பின்னணி இசை வேற இதெல்லாம் அதில் எதிரொலி (ரிஃப்ளெக்ட்) ஆச்சுன்னா அது சிம்பொனி கிடையாது. எனவே பியூர் சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்தச் சொல்லிக்கொள்கிறேன்.” என்றும் இளையராஜா கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com