வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கொரோனா தொற்று : வானதி சீனிவாசன் ட்வீட்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் வானதி சீனிவாசன் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். நலமுடன் இருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com