வைகோ
வைகோ

“நான் நலமாக இருக்கிறேன்!” – வீடியோ வெளியிட்ட வைகோ!

நான் நலமாக இருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டும் வருவேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டத்தை தொடர்ந்து, அறுவை சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், இன்று வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.

இதையடுத்து மருத்துவமனையிலிருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றைப் பேசி வெளியிட்டுள்ளார் வைகோ.

அந்த வீடியோ பதிவில்:

நான் ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. இப்போது நான்கு நாள்களுக்கு முன்பு, நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன். அப்படியே இடது புறமாக சாய்ந்து விட்டேன்.

இதில் தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க உடனே நீங்க சென்னைக்கு போக வேண்டும். அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

அறுவை சிகிச்சைக்குப் பின் நான் முன்பு போல் இயங்க முடியுமா என யாரும் சந்தேகப்பட வேண்டாம். தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய குணமடைந்து வருவேன். எனக்காக வருந்தும் உள்ளங்களுக்கு நன்றி என்று வைகோ தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com