தனி வழியில் அண்ணாமலை... முதல் மாநாட்டில் பேசியது என்ன ?

Annamalai
அண்ணாமலை
Published on

பா.ஜ.க.விலிருந்து விலகிய அண்ணாமலை, 'வீ தி லீடர்ஸ்' எனும் புதிய அரசியல் - சமூக இயக்கத்தை, தனது பிறந்தநாளான ஜூன் 5ஆம் தேதி தொடங்கினார்.

இந்த இயக்கத்தின் முதல் மாநாடு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 'போதை இல்லாத தமிழ்நாடு' என்ற கருப்பொருளுடன் நேற்று நடைபெற்றது.

நேற்றைய மாநாட்டில் அண்ணாமலை பேசியதில் முக்கிய அம்சங்கள்:

* போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

* 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031 சட்டபேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

* மாவட்டவாரியாக மக்கள் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தப்படும்.

* இந்த அமைப்பு தொடங்கிய 38 நாள்களில் 19 இலட்​சம் பேர் உறுப்​பினர்களாகச் சேர்ந்​துள்​ளனர்.

* மக்கள் வாக்​களித்து தேர்ந்​தெடுத்​துள்​ள இந்த அரசுக்கு மரியாதை கொடுக்க வேண்​டும்.

* தற்போது புதிய அரசில் பொறுப்பேற்றுள்ள அமைச்​சர்​கள் பெரும்​பாலானோர் முதல் முறை​யாக அமைச்​ச​ரானவர்​கள். அதனால் தடு​மாற்​றம் இருக்​கத்​தான் செய்​யும்; ஒரு நல்ல சமுதாயம் என்பது அவர்கள் தடு​மாறும்போது தூக்கிவிட வேண்​டும்; கீழே அழுத்​தக்​கூ​டாது. 

* என்னை இந்து விரோதி என்​கிறார்​கள். ஜாதி, மதம் ஆகிய அடையாளங்களை வீட்​டுக்​குள் பூட்டிவைத்துவிட்டுதான் வெளியே வந்​துள்​ளேன்.” என்று அண்ணாமலை பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com